இளசுகளை தூண்டும் காதல் கதை… விஜய் தேவரகொண்டா – சமந்தாவின் குஷி படம் எப்படி இருக்கு?.. விமர்சனம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இளசுகளை தூண்டும் காதல் கதை… விஜய் தேவரகொண்டா – சமந்தாவின் குஷி படம் எப்படி இருக்கு?.. விமர்சனம்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் தான் குஷி. இந்த திரைப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த கதையில் வேலை விஷயமாக விஜய் தேவரகொண்டா காஷ்மீருக்கு செல்லும் நிலையில் முஸ்லிம் பெண்ணான சமந்தாவை பார்த்ததும் காதல் மலர்கிறது. அதன் பிறகு காதலுக்காக அவர் செய்யும் சேட்டைகளை பார்த்ததும் சமந்தாவுக்கு காதல் வருகிறது.

ஆனால் அதன் பிறகு சமந்தா ஒரு பிராமின் என்றும் அவருடைய அப்பா சாஸ்திர சம்பிரதாயங்களை அதிகம் பார்க்கக் கூடியவர் என தெரிய வருகிறது. ஆனால் விஜய் தேவரகொண்டாவின் அப்பா அதற்கு எதிர்மறையானவர் என்பதால் திருமணத்திற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. இதையெல்லாம் தாண்டி பதிவு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தான் இந்த திரைப்படத்தின் கதை.

Advertisement

பொதுவாகவே இது போன்ற கதையை கொண்ட பல திரைப்படங்களை நாம் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் மூச்சு முட்ட காதலிக்கும் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவை பார்க்கும் போது அனைவருக்கும் ஒரு லவ் ஃபீல் வருகிறது. குறிப்பாக இளசுகளை கவரும் வகையில் திரைக்கதையை இயக்குனர் கொடுத்துள்ளார்.

முதல் பாகத்தில் இப்படி காதல் கதையாக செல்ல இரண்டாம் பாகத்தில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் மற்றும் சண்டைகள் என கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கிறது. காஷ்மீர், கேரளா மற்றும் துருக்கி என பல இடங்களில் அழகை காட்டும் ஒளிப்பதிவும் இந்த திரைப்படத்தை ரசிக்க வைத்துள்ளது. எனவே பலரும் பார்க்கத் தூண்டும் வகையில் குஷி திரைப்படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement