CINEMA
குழந்தை தங்குவதில் ரோகினிக்கு சிக்கல்…. மீனாவுக்கு தெரியவரும் உண்மை…. சிறகடிக்க ஆசை தொடரில் பரபரப்பு…!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மீனா தன்னுடைய மாமியாரின் கொடுமையை தாங்கிக்கொண்டு குடும்பத்தை நேர்த்தியாக கொண்டு செல்கிறார். விஜயா தனியாக நடனப்பள்ளி ஆரம்பித்துள்ளார். அதில் சில மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இந்த நிலையில் ரோகிணி மருத்துவமனைக்கு வந்துள்ளார் .
தனக்கு குழந்தை தங்கவில்லை என்பதால் பரிசோதிக்க வந்தபோது இதை மீனாவின் தங்கை சீதா பார்த்துவிட்டு மீனாவிடம் கூறியுள்ளார். இதனால் வீட்டில் மீண்டும் என்ன பிரச்சனை ஆரம்பிக்கப் போகிறது? மீனா முத்து இருவரும் ரோகிணியின் உண்மையை கண்டறிவார்களா? என்ற கேள்வி ஆனது ரசிகர்களை இடையே எழுந்துள்ளது.