LATEST NEWS
கணவர் இறப்புக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கிய மீனா…. அவரே பகிர்ந்த வீடியோ இதோ….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தனது கணவரின் இழப்பிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடிகை மீனா மீண்டு வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது மீனா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடும்போது எடுக்கப்பட்ட வீடியோவை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க