LATEST NEWS
பணம் தான் முக்கியம்… ‘எப்படி வேணாலும் என்ன யூஸ் பண்ணிங்க’..! சர்ச்சை படத்துக்கு ஒகே சொன்ன அமலா பால்..??

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஜான் மாக்சு தயாரிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மைனா’. இப்படத்தில் விதார்த், அமலா பால், சேது, தம்பி, ராமையா, சுசான் சார்ஜ் , செவ்வாழை, மண்ரோடு மாணிக்கம் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலாபால்.

#image_title
இவர் கொச்சின் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் B.A ENGLISH பட்டம் பெற்றார். அதை தொடர்ந்து திரை துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக நடிக்க ஆரம்பித்தார். 2009 ஆம் ஆண்டு வெளியான ‘நீலத்தாமர’ என்ற மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

#image_title
அதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படமானது இவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கவில்லை. ‘மைனா’ திரைப்படத்தின் மூலமாக இவரின் திரை பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து.
அதை தொடர்ந்து தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை அமலா பால் தமிழில் உருவாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் கதையில் கியாரா அத்வானி நடித்த கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், மார்க்கெட்டை இழந்தார்.தற்பொழுது அந்த மாதிரி காட்சியில் நடித்து பெயரை கொடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ரசிகர்கள் அறிவுரை கூறினாலும் சம்பளத்தை கருத்தில் கொண்டு படத்திற்கு ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.