TRENDING
தாலாட்டு பாடிக்கொண்டே தனது 3 குழந்தைகளுக்கு கொடூரம் புரிந்த தாய்…??? நீதிமன்றத்திலும் தாலாட்டு பாடல் பாடிய இளம் தாய் … ???Monster Mum …
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 3 சிறுவர்கள் சடலமாக இருந்ததை அந்த குடி இருப்பில் வசித்த பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். காவல்துறையினரும் இது குறித்து சிறுவர்களின் சடலங்களை மீட்டு விசாரணைக்காக அவர்களது தாயார் 22 வயதான ரேச்சல் ஹென்றி என்னும் இளம் பெண்ணை கைது செய்தனர். முதலில் குழந்தைகளை நானே கொலை செய்தேன் என்று ஒத்துக்கொண்ட தாய் பிறகு குழந்தைகள் மூன்று பேரும் நோயினால் அவதிபட்டார்கள் .அதனால் அவர்களை கொன்று விட்டேன் என்று கூறினார்.
பிறகு நீதி மன்றத்தில் நீதிபதி எதற்காக கொலை செய்தீர்கள் எப்படி கொலை செய்தீர்கள் என்று கேட்டதற்கு பாடல் பாடி அவர் எப்படி கொலை செய்தார் என்பதை தெரிவித்தார். முதலில் தனது 1 வயது மகனை மூக்கு மாற்று வாயை அழுத்திப்பிடித்து கொண்டு அவன் மூச்சி திணறசாகும்வரை காத்து கொண்டு இருந்தேன் . அப்பொழுது அவனை கொள்ள வேண்டாம் விட்டு விடுங்கள் என்று எனது 3 வயது மகன் என்னிடம் கெஞ்சினான் மேலும் என்னை எட்டி உதைத்தான் என்னை அவனது நகங்கள் கொண்டு கீரியும் கடித்தும் வைத்தான் ஆத்திரம் தாங்காமல் அவனை நான் எட்டி உதைத்து விட்டேன் .
பிறகு இந்த 1 வயது மகன் இறந்தபிறகு 3 வயது மகனை கழுத்தை நெரித்து அவனுக்கு மிகவும் பிடித்த பாடலை பாடி அவனை சாகடிதேன் . பிறகு இறுதியாக எனது 7 மாத குழந்தையை அதே போல் பாட்டுப்பாடி மூச்சி திணறும் வரை அவனது கழுத்தை பிடித்து அமுக்கி சாகடித்துவிட்டு அவர்கள் மூவரையும் ஷோபாவில் படுக்கவைத்து விட்டேன் மூவரும் தூங்குவதுபோல் என்று அவரது கொலையை ஒப்புக்கொண்டார். மேலும் தாயின் மீது கொலை சந்தேகம் வர கரணம் அந்த 3 சிறுவர்களின் தந்தை தான் .
அவருக்கு மூன்று குழந்தைகளும் ஒரே நேரத்தில் இறந்தது சந்தேகமாக இருந்தது அந்த சிறுவர்கள் அருகில் இருந்தது அவரது மனைவி ரேச்சல் ஹென்றி மட்டும் தான். அதனால் தான் அவரை கைது செய்து விசாரணையில் வைக்கும் படி போலீசாரிடம் புகார் அளித்தார். தாயே தன் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
