LATEST NEWS
நவரச நாயகன் கார்த்திக்கிற்கு திடீர் உடல்நல குறைவு…. என்ன ஆச்சு தெரியுமா?…. செய்தியை கேட்டு பதறிய ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். இவரின் மகன் கௌதம் கார்த்திக்குக்கு அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட காலமாக அவர் பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார். அதன் காரணமாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.