நயன்தாரா கர்ப்பமாக இல்லையே….! அப்புறம் எப்படி குழந்தை பிறந்தது….. அந்த தகவல் உண்மை தானோ?….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நயன்தாரா கர்ப்பமாக இல்லையே….! அப்புறம் எப்படி குழந்தை பிறந்தது….. அந்த தகவல் உண்மை தானோ?….!!!!

Published

on

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் குழந்தை பிறந்து விட்டது என்ற தகவலை இணையத்தில் பதிவிட்டதிலிருந்து அது எப்படி நயன்தாரா கர்ப்பமாகவே இல்லையே? எப்படி குழந்தை பெற்றுக் கொண்டனர் என்று அனைவரும் ஷாக்கில் மூழ்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தன. அதன் பிறகு கோவில், ஹனிமூன் என்று சுற்றித்திரிந்த இந்த ஜோடிகள் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தன. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் குழந்தைகளை பெற்றிருப்பதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அது எப்படி சமீபத்தில் வெளியான எந்த புகைப்படத்திலும் நயன்தாரா கர்ப்பமானதாக தெரியவில்லை. அவரின் வயிறு பெரிதாகவும் இல்லை.

Advertisement

 

இப்படி இருக்கும்போது எப்படி இவர்கள் குழந்தை பிறந்தது என்று அனைவரும் குழப்பம் அடைந்தனர். ஒருவேளை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்களா ?என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை இருக்கின்றது என்று கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் இவர்கள் நிச்சயமாக வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுள்ளனர் என்பது நிரூபணமாகி உள்ளது.

Advertisement

பாலிவுட்டில் இது அதிகமாக நடைபெற்று வருகின்றது சாருக் கான் கூட வாடகைத்தாய் மூலமாக ஒரு ஆண் குழந்தைக்கு அப்பா ஆகி உள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சோசியல் மீடியாவில் இரட்டை ஆண் குழந்தைகளோடு இருக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு நானும் நயன்தாராவும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். எங்களை அனைவரும் வாழ்த்துங்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் இனி இவர்கள் தான் எங்கள், உயிர், உலகம் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in