LATEST NEWS
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோ ஸ்டாலின் முத்து…. பாரதிராஜாவின் வாரிசு…. ஒரு சுவாரசிய தொகுப்பு இதோ….!!!!

தமிழ் சின்ன திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஸ்டாலின் முத்து.
இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் பாசக்கார அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேல் இவர் நடிப்புத் துறையில் இருந்தாலும் ஏப்பா தமிழ் என்ற சீரியலில் யாராவது அழைக்கும் போது மூக்குப் புடைக்க தடித்த குரலில் பதில் கொடுக்கும் தமிழரசன் கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் ஸ்டாலின் முத்து.
இவர் முதன்முதலாக இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய தெற்கத்தி பொண்ணு சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தற்போது இவர் விஜய் டிவியில் குடும்ப கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தியாக நடித்து வருகின்றார்.
அந்த சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டுள்ளார்.
அண்ணன் தம்பிகளின் பாச கதையை மையமாகக் கொண்ட குடும்ப சீரியல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஸ்டாலின் முத்து, சுஜிதா,வெங்கட் மற்றும் ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஸ்டாலின் பிரபல தமிழ் இயக்குனர் பாரதிராஜாவின் அண்ணன் மகன்.
இவர் திரைத்துறைக்கு வரும்போது அவரின் நடிப்பின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது.
ஆண்டாள் அழகர் மற்றும் கனா காணும் காலங்கள் என அடுத்தடுத்த சீரியல்களில் ஸ்டாலின் முத்து அண்ணன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அது மட்டுமல்லாமல் பாசமலர் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு திருமணம் முடிந்த இரண்டு பிள்ளைகள் உள்ளன.
இவர் சினிமாவில் அன்புடன் இருப்பது போலவே தனது ரியல் லைஃபிலும் வாழ்ந்து வருகிறார்.
தற்போது வரை சின்னத்திரையில் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் தன்னுடைய சித்தப்பா பாரதிராஜாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.