LATEST NEWS
துபாயில் தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்த…. நடிகை பூர்ணா….! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் பூர்ணா. இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, காப்பான், தலைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பே இவரின் திருமணம் தொடர்பான தகவல் வெளியானது. இவருக்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக பேச்சு எழுப்பப்பட்டது. அதன் பிறகு இது தொடர்பான எந்த தகவலும் வெளியாகாததால் இவர்களின் திருமணம் நின்று விட்டதாக கூறிவந்தனர். இதைத்தொடர்ந்து இவர் தற்போது துபாயில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர். பிரபலங்கள் யாருக்கும் இதில் அழைப்பு விடுக்கப்படவில்லை. இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. விரைவில் இவர்களின் ரிசப்ஷன் இந்தியாவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.