GALLERY
புஷ்பவனம்-அனிதா தம்பதிக்கு இவ்வளவு பெரிய மகளா..? மருத்துவத்துறையில் கலக்கும் பெண்.. பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமி தமிழக அரசின் கலை மாமணி விருதை வென்றவர் ஆவார்.
இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி ஆவார்.
இருவரும் சென்னை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள், வெளிநாடு என பல இடங்களில் இணைந்து பாடியுள்ளனர்.
கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக தையல் எந்திரங்களை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அனிதா தனக்கு சொந்தமான யூடியூப் சேனலில் மாடித்தோட்டம், பூஜை அறை, சமையல் குறிப்பு குறித்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
புஷ்பவனம் குப்புசாமி அனிதா தம்பதியினருக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இதில் மூத்த மகள் பல்லவி சென்னையில் பல் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் ஐ.டி நிபுணரான கௌதம் என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பல்லவி தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.