LATEST NEWS
“தலைவர் 171″…. பாலிவுட்டில் இருந்து முரட்டு நடிகரை களமிறக்கும் லோகி…. தரமான சம்பவம் வெயிட்ங்…!!

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 திரைப்படத்திற்கான பேச்சு தான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதிலும் தலைவரின் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து இஷ்டத்துக்கு கதை கட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோலிவுட் சினிமாவே எதிர்பார்க்கும் அளவிற்கு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படைப்பாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகின்றது.

#image_title
ஏற்கனேவே நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் மிக பிரம்மாண்ட வெற்றி கொடுத்தது. வெற்றிக்கு ஏங்கிக் கொண்டிருந்த தலைவருக்கு இது மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. இதுவரை பிளாப் திரைப்படங்களை கொடுக்காத லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார்.

#image_title
பொதுவாக லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிப்பது வழக்கம் தான். அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் பாலிவுட் ஸ்டாரான ரன்வீர் சிங் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.