TRENDING
பிக்பாஸ் வீட்டில் ரட்சிதாவிற்கு ரூட் போட்ட ராபர்ட் மாஸ்டர்…. அந்த பொருளை அனுப்பி ஷாக் கொடுத்த காதலி…. வைரல் வீடியோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தெரிந்த முகங்கள் பல கலந்து கொண்டுள்ளன. வகையில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டரை பற்றி பலரும் அறிந்திருப்போம். இவர் நடிகை வனிதாவின் முன்னாள் கணவர். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் உள்ளது. பலவிதமான சேட்டைகளை செய்து தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ரக்ஷிதா இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் சற்று தள்ளியே உள்ளார்.
தனக்கு காதலியே இல்லை என்று சொன்ன ராபர்ட் மாஸ்டர் தனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என கூறி இருந்தார். ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து காதல் ப்ரபோஸ் செய்து வருகிறார். அதன்படி ரக்ஷிதா கையைப் பிடித்துக் கொண்டு அண்ணன் தானே முத்தம் கொடு என ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் படியான பல விஷயங்களில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் செய்யும் அட்ராசிட்டியை வெளியில் இருந்து பார்த்து வந்த அவரின் காதலி தற்போது கோபமடைந்து ராபர்ட் மாஸ்டர் அவருக்கு அன்பளிப்பாக கொடுத்த மோதிரம் ஒன்றை அவருக்கு பொருட்கள் அனுப்பும்போது அந்த பெட்டியில் போட்டு அனுப்பி பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த மோதிரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராபர்ட் மாஸ்டர் இது தொடர்பாக குயின் சி இடம் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Robert master atrocities paarthu his GF returned the ring…Master shocked…seinja velai appadi#Biggbosstamil6 pic.twitter.com/c2VU8HbgfY
— Aadhik Sri (@aadhik_vet09) November 19, 2022