LATEST NEWS
பவர்புல் வொர்க் அவுட் செய்யும் பிரபல நடிகை.. ஹீரோவுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. சோஷியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கல் நடித்தார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரமாக பேசி முடிவெடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமந்தா மையோசிட்டிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து தனது உடல் நிலையை கவனித்து வந்தார்.
பின்னர் சாகுந்தலம் படம் மூலம் சமந்தா ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா உடல் நலத்தை கவனிப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறார்.
மேலும் படங்களை தாண்டி எப்படி ஆரோக்கியமாக பிட்டாக இருப்பது என்பது குறித்து பல நடிகைகள் வீடியோ, புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமந்தா பவர்ஃபுல் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.