LATEST NEWS
செம க்யூட்…. தனது மகனை கட்டிப்பிடித்து அன்பை பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் மகன்கள் இருவருமே தனது பெற்றோர்களிடம் அன்பு செலுத்தி வருகிறார்கள்.
அவ்வப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் தனித்தனியாக இரண்டு மகன்களும் வெளியில் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது மகன் லிங்காவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க