VIDEOS
“லியோ வந்தாச்சு”… பிரசவ வலியில் துடித்தது முதல் குழந்தை பிறந்தது வரை வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை சஹானா.. என்ன குழந்தை தெரியுமா..??

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளின் ஒருவர்தான் சஹானா ஷெட்டி. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அந்த சீரியலில் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். அதே சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு என்ற சீரியலிலும் இவர் தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கண்ணான கண்ணே என்ற சீரியலிலும் அபர்ணா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
சன் டிவியில் மட்டுமல்லாமல் விஜய் டிவியிலும் பல சீரியல்களில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகல் நிலவு மற்றும் அழகு என பல சீரியல்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் நிஷா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்படி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மருத்துவர் அபிஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சஹானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவத்திற்கு வீட்டிலிருந்து சென்றது முதல் குழந்தை பிறந்தது வரை போட்டோஷூட் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வர ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க