முகத்தில் காயத்துடன், கணவர் கையை இறுக்கமாக பிடித்து வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை சமீரா.. இவருக்கு என்ன ஆச்சி..?? - cinefeeds
Connect with us

VIDEOS

முகத்தில் காயத்துடன், கணவர் கையை இறுக்கமாக பிடித்து வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை சமீரா.. இவருக்கு என்ன ஆச்சி..??

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சமீரா ஷரின். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெக்கை கட்டி பறக்குது மனசு என்ற சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே பகல் நிலவு சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சயத்தை பல வருடமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்திற்கு பிறகு இருவரும் ரெக்கை கட்டி பறக்குது மனசு என்ற தொடரை தயாரித்து அதில் நடித்திருந்தனர். ஆனால் இந்த தொடர் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

Advertisement

தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் முகத்தில் காயம் இருக்கும் ஒரு புகைப்படத்தை சமீரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பலரும் என்ன ஆனது என்று கேட்க தொடங்கிய நிலையில் அதற்கு சமீரா தற்போது பதில் அளித்துள்ளார். அதாவது இந்த போட்டோவை பார்த்து என்னுடைய கணவர் தான் என்னை தாக்கி விட்டார் என்று நினைத்து விடாதீர்கள் இந்த காயத்திற்கு என்னுடைய மகன்தான் காரணம்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sameera Sherief இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sameerasherief)

Advertisement

திருமணமான புதிதில் உறவினர்கள் குழந்தையுடன் விளையாடும் போதே சில காயங்கள் ஏற்படும் அதை பார்த்துக்கூட பலரும் என்னுடைய கணவர் தான் தாக்கிவிட்டார் என்று நினைத்து கேட்பார்கள். எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் முடிவு செய்ய வேண்டாம் என்று சமீரா கூறி புகைப்படத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். தற்போது அவர் ஊசி போடும் ஒரு வீடியோவை பகிர்ந்து துணையாக கணவர் இருப்பதாக கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Sameera Sherief இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sameerasherief)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in