LATEST NEWS
பாவாடை தாவணி போட்டுக்கிட்டு கிராமத்து லுக்கில் நடித்த சீரியல் நடிகை ஷீலாவா இது?.. இப்படி மாடர்ன் பொண்ணா மாறிட்டாங்களே..!!

ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் பூங்கொடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஷீலா.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை சீரியல்களில் நடித்து வந்த நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலை விட்டு விலகி விட்டார். டூ லெட்என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தன.
அதரைத் தொடர்ந்து அசுரவதம் மற்றும் மனுசங்கடா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் கும்பலாக்கி நைட்ஸ் என்ற திரைப்படம் மூலம் மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்தார்.
குறிப்பாக இவர் நடித்த திரௌபதி மற்றும் மண்டேலா உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
அழகிய தமிழ் மகள் சீரியலில் மிகவும் கிராமத்து பெண்ணாக நடித்த ஷீலா தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.