TRENDING
பட்டி தொட்டியை தாண்டி… இளையராஜாவின் இசை ஆஸ்திரேலியாவிலும் கொடிகட்டி பறக்கும்… வைரலான வீடியோ…!

2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். ஆல்ரவுண்டரான இவர் 2018 ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே.வின் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டு கோப்பையையும் கைப்பற்றினர் .
2019 ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் தனது இன்னிங்ஸிற்காக ரசிகர்களால் இன்னும் போற்றப்படுகிறார். இதில் ஷேன் வாட்சன் காலில் பலத்த காயம் ஏற்பட்டாலும் தொடர்ந்து விளையாடி அவர் போட்டியை இறுதி ஓவருக்கு கொண்டு சென்றார். ஆனால் சி.எஸ்.கே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பின்னர், அவரது சக வீரரான ஹர்பஜன் சிங் இரத்த கறையுடன் உள்ள கால்சட்டையின் படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த காயத்தினால் வாட்சனுக்கு காயத்திற்கு ஆறு தையல்கள் தேவைப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் விளம்பரத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் நேர்காணலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் நேர்காணல் செய்பவர் ஷேன் வாட்சனிடம், உங்கள் சிறப்புத் திறமை என்ன? என்று வினவியபோது, உடனே அவர் கிடாரை எடுத்து ‘மூடுபனி’ படத்தில் இளையராஜாவின் “என் இனிய பொன் நிலவே” படத்தின் முன்னுரையை வாசித்தார். இது தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “என் இனிய பொன் நிலவே” பாடலை ஷேன் வாட்சன் கிட்டாரில் வாசிக்கும் வீடியோ தமிழ் ரசிகர்களால் பெரிதும் வைரலாக்கப்பட்டு வருகிறது.