LATEST NEWS
பனிமலையில் தலை விரித்தாடும் சங்கர் மகள் அதிதி…. வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் கொண்ட அதிக ஆர்வம் காரணமாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார். அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் கமிட்டாகி அதிதி சங்கர் நடித்து வருகின்றார்.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி சமீப காலமாக பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடிய இவர் பணி பிரதேசத்தில் விளையாடும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் அவரை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க