TRENDING
“காடு இருந்தா புடிங்கிப்பாங்க படிப்பு தான் முக்கியம்”- ‘கல்வி விருது வழங்கும் விழா’வில் மாஸாக பேசிய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து தற்பொழுது லியோ திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய் சினிமாவில் மட்டுமின்றி மக்கள் நலனிலும், மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்டவர்.
இதற்காக அவர் தொடங்கியதே விஜய் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது. தற்போது விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை இன்று சந்திக்க உள்ளார்.
அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று நடைபெற்று வரும் ‘விஜய் கல்வி விருது வழங்கும் விழா’ விற்கு நடிகர் விஜய் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் தற்பொழுது அங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் இன்று இந்த விழா நடைபெறுகிறது. எதற்காக சுமார் 1500 மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் வருகை தந்துள்ளார்.
அங்குள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து விஜயை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அங்கு நடிகர் விஜய் பேசும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ…