LATEST NEWS
அந்த ஒரு நொடி நான் அழுதுட்டேன்…. வாரிசு பற்றி எமோஷனல் பதிவு போட்ட இசையமைப்பாளர் தமன்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தமன் இசையமைக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சென்டிமென்ட் நிறைந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாரிசு திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் பற்றி இசையமைப்பாளர் தமன் போட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில்,வாரிசு படத்தின் சென்டிமென்ட் காட்சிகளை பார்த்து கண் கலங்கி அழுததாகவும் அப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தந்த தளபதிக்கு மனமார்ந்த நன்றிகள் என அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/MusicThaman/status/1612740094468960257