CINEMA
“பிளான் A, B மட்டுமில்ல Z வரை” ட்ரெய்லரில் டுவிஸ்ட் வைத்த ‘G.O.A.T’ படக்குழு…!!

நடிகர் விஜய் நடிப்பில் , இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் G.O.A.T. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகியுள்ளது. இதில் மாஸான என்ட்ரி கொடுக்கும் விஜய், வித்தியாசமான கெட்டப்பில் அசத்தி இருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் வரும்போது யுவன் சங்கர் ராஜாவின் BGM செம மிரட்டலாக இருக்கிறது.
இந்நிலையில், தெலுங்கு மற்றும் ஹிந்தி ட்ரெய்லர்களையும் வைரலாக்கும் நோக்கத்தில் படக்குழு டுவிஸ்ட் வைத்துள்ளது. அதாவது, தமிழ் பதிப்பு ட்ரெய்லரில் இடம்பெறும் கடைசி காட்சிகளுக்கு பதிலாக, மற்ற மொழி டிரெய்லர்களில் வேறு சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “பிளான் A, B மட்டுமில்ல, Z வரைக்கும் வச்சிருக்கேன்” என்ற டயலாக்கும் அதில் இடம்பெற்றுள்ளன.