TRENDING
தந்தை சொன்னதை கேட்காத மகள் செய்த செயல் ..?? இரவில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம் … தந்தை கண்ட காட்சி…???

பிள்ளைகளை பெற்றவர்கள் பாசத்துடன் வளர்ப்பது நல்லது பாசத்தால் அவர்கள் நல்லமுறையில் வளரவேண்டும் தவறாக அதே பாசமே அவர்களை அழித்து விட கூடாது . குழந்தைகளுக்கு பாசத்துடன் சேர்ந்து கொஞ்சம் கண்டிப்புடனும் வளர்க்க வேண்டும். அவர்கள் செய்யும் தவறுகளை சிறுவயதிலிருந்தே திருத்தி வளர்க்க வேண்டும் எது சரி எது தவறு என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் .அப்படி செய்யாமல் குழந்தைகள் அடம் பிடித்தால் உடனே அது தவறாக இருந்தாலும் அதனை அவர்களுக்கு செய்து தர கூடாது .
அப்படி செய்தால் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களுக்கே பேராபத்தை உண்டாகும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்து காட்டு . பாசத்துடன் வளர்த்த தந்தை அக்கரையில் திட்டியதால் அதனை தவறாக எடுத்து கொண்டு விஷத்தை பருகி தன் உயிரை மாய்த்து கொண்ட இளம் பெண் . நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சுந்தர் ராஜ். இவரது ஒரே மகள் பிரியா . சுந்தர் ராஜ் கூலி வேலை செய்து கொண்டு தான் ஒரே மகளை படிக்கச் வைத்து உள்ளார். மகள் பிரியா தனது பட்டப்படிப்பு படித்து முடித்தவுடன் துபாயில் வேலை கிடைத்து சில வருடங்களாக துபாய்க்கு சென்று வேலை செய்து வருகிறார்.
தற்பொழுது விடுமுறை என்பதால் சொந்த ஊரான கோத்தகிரிக்கு தந்தையை பார்க்க வந்து உள்ளார் .சில தினங்களுக்கு பின்னர் தன்னுடன் துபாயில் வேலை செய்து வரும் தோழியின் தந்தை இறந்துவிட்டார் என்பதற்காக சென்னைக்கு போகவேண்டும் என்று தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் சுந்தர் ரஜோ இது ராத்திரி வேலை என்பதால் போகக்கூடாது என்று கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது ,சண்டை போட்டு விட்டு கோபத்துடன் சுந்தர் ராஜ் வீடு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழது வீட்டில் கோபமாக இருந்த பிரியா உருளைக்கிழங்கிற்கு அடிக்கும் பூச்சி மருந்தினை எடுத்து குடித்து விட்டு மயக்கத்துடன் வீட்டில் சுருண்டு விழுந்து உள்ளாள். அப்பொழது அங்கு வந்த உறவினர் பார்கக உடனடியாக ப்ரியாவை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். ப்ரியாவின் சடலத்தை பார்த்த தந்தை சுந்தர் ரஜோ இரவில் போகவேண்டாம் என்று சொன்னதற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்து விட்டாயே என்று கதறிவுள்ளார்.
மேலும் தற்கொலை வழக்கு பதிவு செய்து ப்ரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அடக்கம் செய்யப்படும். மேலும் தந்தை சுந்தர் ராஜிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.