LATEST NEWS
நீயெல்லாம் மனுஷியா டி!.. 2 மாதக் குழந்தையின் காலை முறுக்கிய ராட்சசி… கேமராவில் சிக்கிய அத்தையின் கொடூரமுகம்.. இணையத்தைக் கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் குதா கோர்ஜியில் நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக, 2 மாதக் குழந்தையை அவரது சொந்த அத்தையே மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளார். குழந்தை காரணமின்றித் தொடர்ந்து அழுவதையும், அதன் உடலில் விளக்கம் சொல்ல முடியாத காயங்கள் இருப்பதையும் கவனித்த தாய் சந்தேகமடைந்தார். உண்மையைக் கண்டறிய அவர் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார்.
A shocking case from Gudha Gorji, Rajasthan
A 2-month-old baby was physically abused by her aunt due to a family dispute.
The baby’s mother became suspicious after noticing unexplained crying and injuries, so she secretly installed CCTV cameras.
The footage showed the aunt… pic.twitter.com/pTYRAI8OPC— Breaking Beta (@MenMuscleMoney) July 21, 2026
அதில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, அத்தை அந்தக் குழந்தையின் காலைக் கொடூரமாக முறுக்கி, எலும்பு முறிவு ஏற்படுத்தியது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்களை விடப் பெண்கள் அதிக இரக்க குணம் கொண்டவர்கள் என்று கூறப்படும் கருத்துக்களைத் தகர்க்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்திருப்பது பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
