தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி நேற்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. தாவணி கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் உடன்பால் திரைப்படம் வரை தனது நடிப்பால் நகைச்சுவையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி போட்டவர்.

தீவிர சிவபக்தனான இவர் சிவபெருமானின் திருநாளான சிவராத்திரி தினத்தில் உயிரிழந்தே சிவ பக்தன் ஆகிவிட்டார்.தன்னிடம் இருக்கும் அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்த மாமனிதர். வாரி வாரி வழங்குவதில் வல்லவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தமிழில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி பன்முகத் திறமை கொண்ட இவர் நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் மயில்சாமி இறப்பதற்கு முன்பு ட்ரம்ஸ் சிவமணி இடம் ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு நடிகர் விவேக் அழைத்து வந்தேன் மேலும் பல பிரபலங்களை அழைத்து வந்துள்ளேன், ஆனால் எனக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று உள்ளது,இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்து வருவது தான் என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டார். இறுதியாக மயில்சாமி கோவிலில் இருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.