CINEMA
”கண்ணே கலைமானே’ சீரியலை விட்டு விலக இதுதான் காரணம்’… நடிகர் நந்தா ஓபன் டாக்… ரசிகர்கள் ஷாக்…

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கண்ணே கலைமானே. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹீரோவாக டான்ஸ் மாஸ்டர் நந்தா நடித்து வந்தார். பானுவுக்கு கண் பார்வை திரும்பி வந்த நிலையில் அவருக்கு எல்லா உண்மைகளும் தெரியவந்து தன்னுடைய கணவனை ஏற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட இந்த சீரியல் கிளைமாக்ஸ் நெருங்கி விட்ட நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் நந்தா மாஸ்டர்.
அவருக்கு பதிலாக ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீன் வெற்றி இந்த சீரியலில் நந்தா மாஸ்டருக்கு பதிலாக நடிக்க தொடங்கியுள்ளார்.தற்பொழுது நந்தா மாஸ்டர் தான் இந்த சீரியலை விட்டு விலக காரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், சீரியல் ‘படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்து உள்ளதால் கண்ணே கலைமானே தொடரிலிருந்து விலகியதாகவும்,
மேலும் விரைவில்தனக்கு காலில் ஆபரேஷன் நடக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது அவரது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர் பூரண நலம் பெற்று குணம் அடைய வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….
View this post on Instagram