TRENDING
TRP-ல் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய ‘கே டிவி’, ஆனால் முதல் இடத்தில் யார் தெரியுமா? டாப் 5 லிஸ்ட் இதோ!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடங்கியுள்ளன.இதை பயன்படுத்தி கொண்ட டிவி சேனல்கள் சமீப காலமாக TRP-காக முன்னணி தமிழ் தொலைக்காட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
அதேசமயம் கொரோனாவால் எந்த ஒரு நிகழ்ச்சியையும் முன்னணி தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை. இதனால் படங்களையும் இதற்கு முன் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளையும் மறுஒளிபரப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த கொரோனாவால் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின் TRP-யும் மிகவும் கீழே சரிந்துள்ளது. ஆம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 24 தேதி வரை எடுக்கப்பட்ட TRP வாக்கெடுப்பில் விஜய் டிவி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
மேலும் கே டிவி 2ஆம் இடத்தையும் சன் டிவி 1ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. இதனால் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று கூட கூறலாம். 4வது இடத்தில் ஜீ தமிழ், 5ம் இடத்தில் விஜய் சூப்பர் உள்ளது.