சாப்பிட வந்த இடத்தில் அராஜகம்..! மாற்றுத்திறனாளி சிறுவனின் காதைக் கிழித்த தவெக நிர்வாகிகள் … திருவள்ளூரில் பகீர்..!! – cinefeeds
Connect with us

CRIME

சாப்பிட வந்த இடத்தில் அராஜகம்..! மாற்றுத்திறனாளி சிறுவனின் காதைக் கிழித்த தவெக நிர்வாகிகள் … திருவள்ளூரில் பகீர்..!!

Published

on

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களை, தவெக நிர்வாகிகள் ரவிக்குமார் மற்றும் யாபேஸ் ஆகியோர் கொடூரமாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் திடீர் தாக்குதலில், மாற்றுத்திறனாளியான புஷ்பராஜ் என்ற சிறுவனின் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அச்சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவர்கள் தாக்கப்பட்ட இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், திருநின்றவூர் காவல்துறையினர் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளான ரவிக்குமார் மற்றும் யாபேஸ் ஆகியோரைத் தனிப்படை அமைத்துக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in