CINEMA
Biggboss8: அந்த விஷயத்துல என்ன ஆம்பள, பொம்பள…. அர்ணவிற்கு செருப்படி பதில் கொடுத்த விஜய் சேதுபதி…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சொல்லும் வரை இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிற்குள் நுழையும் முன்பாக விஜய் சேதுபதி அர்ணவிடம் பேசுகையில், உங்களை பற்றி சொல்லுங்க என்றார். அதற்கு அர்னவ் நான் எப்போதுமே straight forward, தைரியமா மோதிப்பாக்கலாம் நா ஆம்பள என்றார். அதற்கு விஜய் சேதுபதி பதிலடி கொடுக்கும் விதமாக தைரியத்தில் என்ன ஆம்பள, பொம்பள என்று விளாசியுள்ளார்.
https://twitter.com/i/status/1842983374300102687