பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜயகுமார் பேத்தியின் நிச்சயதார்த்த விழா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜயகுமார் பேத்தியின் நிச்சயதார்த்த விழா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார். இவரின் கணவர் கோகுலகிருஷ்ணன். இவர்கள் இருவருமே தோகாவில் மருத்துவர்கள் ஆக உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இவர்களுடைய மகளின் பெயர் தியா. இவர் லண்டனில் ஆறு வருடங்களாக எம்பிபிஎஸ் படித்துள்ளார். சமீபத்தில் படிப்பை நிறைவு செய்து பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெரும் தியாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானது. மேலும் அனிதா விஜயகுமார், இந்த ஒரு வெற்றிக்காக நாங்கள் இதுவரை நிறைய கஷ்டப்பட்டு உள்ளோம்.

Advertisement

இப்படி ஒரு நிகழ்வை பார்ப்பதற்கு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார் . அனிதா விஜயகுமார் குடும்பத்தில் கணவன், மகன் மற்றும் மகள் என அனைவருமே தற்போது மருத்துவர்கள் தான். இந்நிலையில் சமீப காலமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தியா க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது தீயாவிற்கு மிக பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இவரை நிச்சயதார்த்த விழாவில் விஜயகுமாரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in