LATEST NEWS
விஜய் -யின். 64 வது படத்தின் தற்போதைய நிலை என்ன? மாஸ்டர்-யின் கதை என்ன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான “தளபதி விஜய்” தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிவடைந்து விட்டது. டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் தீனா தான் டப்பிங் கொடுத்து வருவதை ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார்.
மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக மோதுவதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக குட்டீஸ்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் பாட்டு பிடித்துள்ளது.
இதனால் அடுத்தடுத்து தாறுமாறான அப்டேட்டுடன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.