CINEMA
என் காலை வெட்டணும்னு சொன்னாங்க…. “தங்கலான்” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் உருக்கம்…!!

நடிகர் விக்ரம் நடிப்பில், உருவான திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட மிக்க முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ரம், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தபோது, தனக்கு நேர்ந்த சாலை விபத்தில் காலை எடுக்க வேண்டும் என கூறினார்கள். ஆனால் நம்பிக்கையுடன் ஊன்றுகோல் வைத்து நடந்தேன். என்னுடை படங்கள் ஓடாதபோதும், சினிமாவை நேசிப்பதை விடவில்லை. சினிமா தனக்கு கொடுத்த அன்பளிப்பே ரசிகர்கள் எனவு உருக்கமாகபேசியுள்ளார்.