CRIME
“10 நாட்கள் காதலனுடன் தங்கிவிட்டு வந்த மனைவி..!” ஆத்திரத்தில் கணவர் சந்தீப் எடுத்த விபரீத முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு மத எல்லைகளைக் கடந்து காதல் திருமணம் செய்துகொண்ட சீமா (30) என்ற பெண், அவரது கணவர் சந்தீப்பால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமாவின் தோழி அடிக்கடி அவர்களது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் என்றும், சந்தீப் இல்லாத நேரங்களில் அவர் அங்கேயே தங்குவதுண்டு என்றும் கூறப்படுகிறது. மனைவியின் தோழி வீட்டிற்கு வருவதை சந்தீப் கடுமையாக எதிர்த்த நிலையில், இது தொடர்பாக தம்பதியிடையே நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியான குடும்பச் சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளதாக சந்தீப்பின் தாய் சுனிதா தெரிவித்துள்ளார்.
இந்தக் குடும்பத் தகராறு நாளுக்கு நாள் முற்றிய நிலையில், சீமா தனது காதலன் ஒருவனுடன் சுமார் 10 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறித் தங்கிவிட்டு அண்மையில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த கணவர் சந்தீப், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இறுதியில் அவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக்கொடூரச் செயலைச் செய்த பிறகு, சந்தீப் தனது மாமனாருக்குத் தொலைபேசியில் அழைத்து, “உன் மகளை நான் கொன்றுவிட்டேன்” என்று திமிராகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பாராபங்கி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
