LATEST NEWS
2020 -ல் இப்படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? மிரண்டுபோன ரசிகர்கள் இமாலய வெற்றி- எந்த படம் அது பார்க்கலாமா.

துல்கர் சல்மான் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி அவர்களின் மகன் ஆவர். இதையும் தாண்டி ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் வெற்றி கண்ட அளவிற்கு மற்ற படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தநிலையில் இவர் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் திரைக்கு வந்த போது ஒருவரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.
ஆனால், அடுத்தடுத்த நாள் படத்தின் விமர்சனம் நன்றாக வர, படமும் பிக்கப் ஆனது, வசூலும் அல்ல தொடங்கியது.இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இதுநாள் வரை சுமார் ரூ 13 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரைஅரங்கங்கள் மூடப்பட்ட நிலையில், இப்படத்தின் வசூல் ரூ 20 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
கண்டிப்பாக துல்கர் திரைப்பயணத்தில் தமிழில் இது ஒரு மைல் கல் படம் தான் என்று கூறினாலும் அது மிகைஅல்ல. அந்த அளவிற்கு அவர் திரைவாழ்க்கையை மாற்றி உள்ளது, என்றே கூறலாம்.இந்த செய்தியானது அவருடைய ரசிகர்கள் இடேயே பெரும் மகிழ்வையும் ஏற்படுத்தி உள்ளது.