TRENDING
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத சிறுவர்களின் மனதைவிட வேறென்ன இவ் உலகில் உண்டு!! கண்ணை கலங்க வைக்கும் காணொளி பதிவு!!
சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் சிறுவர்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும்.
எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் சிறுவர்களின் செயல்களை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.
சிறுவர்களின் வாழ்கையில் இளமைப்பருவம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் சிறுவர்கள் இந்த வயதில் மட்டுமே இவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.
இன்றைய காலங்களில் உள்ள சிறுவர்கள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக திறமையுள்ள புதிய சிந்தனையுள்ள சிறுவர்கள் இருப்பார்கள்.
சிறுவர்கள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற சிறுவர்களின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை.
அந்த வகையில் டெல்லியில் சாலை ஒன்றின் சிக்னலில் நடந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் கார் ஒன்றில் இருக்கும் சிறுவன், சாலையில் தனது காரின் அருகே நின்றுகொண்டிருக்கும் வீடு இல்லாத ஒரு சிறுவனை பார்க்கிறான்.
உடனே தன்னிடம் இருந்த அனைத்து விளையாட்டு பொருட்களையும் எடுத்து அந்த சிறுவனுக்கு விளையாட கொடுக்கிறான்.
அந்த சிறுவனும் சற்று நேரம் விளையாடிவிட்டு, அந்த விளையாட்டு பொருட்களை மீண்டும் அந்த சிறுவனிடம் கொடுக்கிறான்.
ஆனால் அந்த சிறுவன் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. நீயே வைத்துக்கொள் என அந்த ஏழை சிறுவனுக்கே கொடுத்துவிடுகிறான்.
பதிலுக்கு அந்த ஏழை சிறுவனும், அங்கிருந்த கடை ஒன்றில் தின்பண்டம் வாங்கிவந்து காரில் இருக்கும் சிறுவனுக்கு கொடுக்க, அந்த சிறுவன் உடனே அதை பெற்றுக்கொண்டு இருவரும் மாறி மாறி சாப்பிடுகின்றனர்.
பின்னர் கார் அங்கிருந்து நகர, சிறுவர்கள் இருவரும் டாட்டா காட்டியபடி பிரிக்கின்றனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.