TRENDING
கிச்சுக் கிச்சு மூட்டியதும் குழந்தை போலச் சிரிக்கும் அதிசய மீன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
மீன்களில் புரதச்சத்து அதிகம் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஒமேகா கண், இருதயத்துக்கு மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியது.
இந்த மீன்களில் பல இனங்கள் உண்டு. அதில் மனித முகத்தை அச்சு அசலாக பிச்சு வைத்ததைப் போல் இருக்கும் ஒரு மீன் இப்போது பிடிபட்டுள்ளது. இதற்கு மனித முகங்களைப் போலவே கண், மூக்கு, வாய் ஆகியவை முகத்தில் இருக்கிறது. இத்தோடு சராசரி மீன்களைப் போலவே நீந்துவதற்கு வசதியாக வாலும் இருக்கிறது. இந்த மீன் பேத்தா இனத்தைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் இந்த மீன் இனம், அரிதாகவே மீனவர்களின் வலையில் சிக்குமாம். இந்த மீன் பார்க்க அச்சு அசலாக குழந்தையின் முகம் போலவே இருக்கிறது.
அதிலும் இந்த மீன் கிச்சு, கிச்சு மூட்டினால் குழந்தையைப் போலவே குலுங்கி, குலுங்கி சிரிக்கிறது. இந்த மீன் அமெரிக்காவை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் மாட்டியுள்ளது.
அமெரிக்காவின் கேப்கோட் பகுதியை சேர்ந்த எப்ரிடாடர் என்ற மீனவர் வலையில் தான் இந்த அதிசய மீன் மாட்டியுள்ளது. இந்த மீன் கிச்சு, கிச்சு காட்டினால் சிரிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.