TRENDING
கைலாசா நாட்டில் இதற்கு அனுமதி வேண்டும்! தமிழரின் கோரிக்கைக்கு பதிலளித்து வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா..! என்ன சொன்னார் தெரியுமா?
கைலாசா நாட்டில் ஹொட்டல் திறக்க அனுமதி கோரிய தமிழருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நித்தியானந்தா கூறியுள்ளார். கைலாசா என்ற பெயரில் தனி நாடு நிறுவியிருப்பதாக தலைமறைவாக இருந்து கொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார் சாமியார் நித்தியானந்தா.
இதோடு இல்லாமல் தனது கைலாசா நாட்டுக்கு தனி கொடி, பொருளாதார கொள்கை, வங்கி, நாணயங்கள் என வரிசையாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் எங்குள்ளது என்பதே தெரியாத கைலாசா நாட்டில், உணவகங்களை திறக்க அனுமதி கோரி தமிழகத்தின் மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி குமார் என்பவர் நித்யானாந்தாவுக்கு கடிதம் எழுதினார். இதோடு உங்கள் பதிலுக்கு காத்திருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா, அதில் தனது நிர்வாகிகளிடம் கூறி சிட்டி குமாரின் ஹொட்டல் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.