சினிமா காட்சியை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத குட்டிக் குழந்தை… பல லட்சம் பேரை நெகிழ வைத்த தருணம்..! - cinefeeds
Connect with us

TRENDING

சினிமா காட்சியை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத குட்டிக் குழந்தை… பல லட்சம் பேரை நெகிழ வைத்த தருணம்..!

Published

on

குழல் இனிது, யாழ் இனிது என்பர். தன் மக்கள் மழலை சொல் கேளாதாவர் என்பது தமிழ் இலக்கியம் காட்டும் பாதை. செல்லக் குழந்தைகளின் பேச்சுக்கு முன்பு எதையுமே ஈடு சொல்ல முடியாது. அதேநேரம் இன்னும் பேசக்கூட துவங்காத குழந்தைகளின் செய்கையே நம்மை அறியாமல் வெகுவாக ரசிக்கவைக்கும்.

அப்பா_மகள் பாசத்தை மையமாக வைத்து தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ அண்மையில் வெளியானது. இந்த படம் பட்டி, தொட்டியெல்லாம் சக்கைப்போடு போட்டது. பல செல்லக் குழந்தைகளின் விருப்பப்பாடலாகவும் ‘கண்ணாண கண்ணே’ பாடல் இடம் பெற்றது. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்து ஒரு வயதுகூட நிரம்பாத குட்டிக் குழந்தை தன்னையும் அறியாமல் அழுத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

குறித்த இந்தக் காட்சியில் குழந்தை ஒன்று வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தது. அப்போது, டிவியில் தல அஜித்குமார் நடித்து மெகா ஹிட்டான விஸ்வாசம் ஓடிக்கொண்டிருந்தது. அதன் க்ளைமேக்ஸில் ரத்தம் சொட்ட, சொட்ட அஜித்குமார் சண்டையிடுவார். அஜித் அழுதுகொண்டிருக்கும் காட்சியைப் பார்த்ததும் அந்தக் குழந்தை அழத் தொடங்கியது. இதோ அந்தக் காட்சியை நீங்களே பாருங்கள். இதோ அந்தக் காட்சி…

Advertisement
Continue Reading
Advertisement