TRENDING
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி ‘அய்யோ இவரா’ என ஷாக்கான போட்டியாளர்கள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா,
அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். சுசித்ராவின் என்ட்ரியை பார்த்து சில போட்டியாளர்கள் சந்தோஷப்பட்டாலும், பலர் ஷாக் ஆகினர்.
பாடகி சுசித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.