வயிற்றில் குழந்தை..! கணவரின் உடலை கடைசியாக கட்டிப்பிடித்து க தறி அழுத நடிகை மேக்னா! கண்ணீர் விட்டு க தறிய நடிகர் அர்ஜூன்..!! நெஞ்சை உலுக்கிய காணொளி - cinefeeds
Connect with us

TRENDING

வயிற்றில் குழந்தை..! கணவரின் உடலை கடைசியாக கட்டிப்பிடித்து க தறி அழுத நடிகை மேக்னா! கண்ணீர் விட்டு க தறிய நடிகர் அர்ஜூன்..!! நெஞ்சை உலுக்கிய காணொளி

Published

on

கன்னடத் திரைத்துறையின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி சர்ஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜாவின் மரணச் செய்தி கன்னட திரைத்துறை மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு கன்னடம் மட்டுமின்றி தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைத்துறையினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் கதநாயாகியாக நடித்திருந்த நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்தார் சிரஞ்சீவி சர்ஜா. தற்போது மேக்னா கர்ப்பிணியாக உள்ளார். தனது பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்த சிரஞ்சீவி சர்ஜாவின் மரணத்தால் குடும்பத்தினர் உடைந்து போய் உள்ளனர். அவரது பசவங்குடி வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கன்னடத் திரைத்துறை பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்

சிரஞ்சீவி சர்ஜாவின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அரசியல் பிரமுகர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பா, எச்.டி. குமாரசாமி, டி.கே.சிவகுமார் ஆகியோரும் நடிகருக்கு மரியாதை செலுத்தினர் இந்நிலையில் அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முதலில் அவர்களின் சொந்த ஊரான தும்க்கூர் மாவட்டம் மதுகிரி அருகே உள்ள ஜக்கெனஹள்ளியில் அவரது தாத்தா சக்தி பிரசாத்தின் நினைவிடம் அருகே அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

Advertisement

Advertisement

இதுதொடர்பான செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. பின்னர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரரான துருவா சர்ஜாவின் பண்ணை வீடு, அவருக்கு பிடித்தமான இடம் என்பதால் அந்த பண்ணை வீட்டின் தோட்டத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கனகாபுரத்தில் உள்ள இந்த பண்ணைவீடு மற்றும் அதன் அருகில் உள்ள தோட்டத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான வாங்கியுள்ளார் துருவா. சிரஞ்சீவி சர்ஜாவுக்கு அந்த பண்ணை வீடு என்றால் ரொம்பவே விருப்பமாம்.

அதன் காரணமாகவே அவரது உடலை அங்கு அடக்கம் செய்துள்ளனர். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக அவரது மாமாவும் நடிகருமான அர்ஜூன் மற்றும் சகோதரர் துருவா மற்றும் மனைவி ஆகியோர் சிரஞ்சீவியின் உடலை கட்டியணைத்து கதறி அழுதனர். அவர்கள் சிரஞ்சீவியின் முகத்தில் கடைசியாக முத்தம் கொடுத்தது காண்போரை கலங்கச் செய்தது. கணவரின் உடலை கடைசியாக கட்டியணைத்து மேக்னா ராஜ் அழுததும் அங்கிருந்தவர் உலுக்கிவிட்டது.

Advertisement

கதறிய மேக்னாவை நடிகர் அர்ஜூன் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார். இதனை தொடர்ந்து சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு என அனைத்தையுத் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement