Uncategorized
பிரபல குணச்சித்திர நடிகை ஸ்ரீரஞ்சனி மகனை பார்த்துள்ளேர்களா..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ…
மொழி, அலைப்பாயுதே போன்ற படங்களில் அம்மா, அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தான் ஸ்ரீரஞ்சினி அவர்கள். சினிமா மற்றும் டிவி சீரியல் அனுபவங்களை கொண்டுள்ள ஒரு நடிகை தான் ஸ்ரீரஞ்சினி அவர்கள். ஸ்ரீரஞ்சனி முதன் முதலில் “அலைபாயுதே” படத்தில் நடிகர் மாதவனுக்கு அண்ணியாக நடித்தார். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கண்டுகொண்டது “அந்நியன்” படத்தில் நடிகை சதாவின் அம்மாவாக நடித்த போதுதான்.
அப்போதிருந்து இவருக்கு தொடர்ந்து அம்மா, அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரங்களே வந்து கொண்டிருக்கின்றன. நல்ல நடிப்புத் திறமை இருப்பதால், வில்லியாகவும் தன்னால் நடிக்க முடியும் என்று சொல்லும் ஸ்ரீரஞ்சனிக்கு யாரும் வில்லி கேரக்டர் கொடுக்க தயாராக இல்லை. மேலும், தனிஒருவன், வேதாளம், சீமராஜா, சிலுக்குவார் பட்டி சிங்கம்,
அடங்கமறு போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீரஞ்சனி ராஜ சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மைத்ரேயன், மித்ரன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
