LATEST NEWS
1 இல்ல 2 இல்ல 31 குழந்தைகளுக்கு தாயான நடிகை ஹன்சிகா…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தனது நீண்ட நாள் காதலரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது இருவரும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது குறித்து ஒரு பேட்டியில் பேசிய நடிகை ஹன்சிகா, பண்டிகை நாட்களில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று என்னுடைய அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். நல்லது செய்தால் நமக்கும் நல்லது தான் நடக்கும் என அடிக்கடி அவர் கூறுவார். அதனால் நான் சினிமாவில் நடிக்க வந்த பிறகு ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க ஆரம்பித்தேன்.
தற்போது என்னிடம் 31 குழந்தைகள் உள்ளனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கலுக்கு அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கி கொடுத்தேன். அவர்களின் முகத்தில் இருந்த சந்தோசத்தை என்னால் வார்த்தைகளால் கூற முடியவில்லை. கடவுளின் அருள் இருப்பதால் என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.