இது என்னடா புது கதையா இருக்கு?.. பொண்டாட்டி குழம்புக்கு 112 கம்ப்ளைண்ட்.. போலீஸை அலறவிட்ட போதை ஆசாமி.. இணையத்தில் தீயாக பரவும் கலாட்டா வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இது என்னடா புது கதையா இருக்கு?.. பொண்டாட்டி குழம்புக்கு 112 கம்ப்ளைண்ட்.. போலீஸை அலறவிட்ட போதை ஆசாமி.. இணையத்தில் தீயாக பரவும் கலாட்டா வீடியோ…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் புடவுன் மாவட்டத்தில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், தனது மனைவி உலர் காய்கறி பொரியலுக்குப் பதிலாகத் தண்ணீராகக் குழம்பு வைத்ததாகக் கூறி ‘112’ அவசர உதவி எண்ணை அழைத்து நிலையை அதிர வைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரிடம், “தினமும் எனக்கு இப்படித்தான் உணவு சமைத்துத் தருகிறார்” என அந்த நபர் புகார் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

🙏Husband Calls Police Over Wife’s Cooking: wife made watery curry instead of dry veggies

In Badaun UP an intoxicated man dialed the 112 helpline because his wife cooked watery curry instead of dry vegetables.

A viral video captures him complaining to arriving officers about… pic.twitter.com/PPMZH7Hs0q— Ramesh Tiwari (@rameshofficial0) July 21, 2026

தனது அன்றாட உணவு விஷயத்தில் ஏற்பட்ட மனக்கசப்பைக் காவல் துறை வரை கொண்டு சென்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இருப்பினும், நிலைமையைப் புரிந்து கொண்ட உத்தரப் பிரதேசக் காவல் துறையினர், இந்த விசித்திரமான ‘குழம்புப் பிரச்சினையை’ தங்களது பாணியில் நகைச்சுவையாகப் பேசித் தீர்த்து வைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in