CINEMA
“7-வது முறையாக தேசிய விருது” எல்லாப் புகழும் இறைவனுக்கே…. நன்றி கூறிய AR ரஹ்மான்…!!!!

டெல்லியில் 70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் AR ரஹ்மான் ‘பொன்னியின் செல்வன்-1’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். இது அவருக்கு 7வது தேசிய விருது ஆகும். இதற்கு முன்னதாக ரோஜா, மின்சார கனவு. லகான் (ஹிந்தி), கன்னத்தில் முத்தமிட்டாள், மாம் (ஹிந்தி), காற்று வெளியிடை ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேட்டியளித்த ஏஆர் ரஹ்மான், ரொம்ப பெருமையா இருக்கு.. எல்லாப் புகழும் இறைவனுக்கே. பொன்னியின் செல்வனுக்கு இன்னும் நெறைய விருதுகள் கிடைத்திருக்கணும் என்று பேசியுள்ளார்.