விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யாவிடம் இருந்து 250 கோடி ஜீவனாம்சம்…. பல நாள் உண்மையை போட்டுடைத்த நடிகை சமந்தா….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யாவிடம் இருந்து 250 கோடி ஜீவனாம்சம்…. பல நாள் உண்மையை போட்டுடைத்த நடிகை சமந்தா….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் முதன்முதலில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனம் ஆடுவதன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்த நிலையில் இருவருக்கும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் ஒன்றாக பல வருடங்கள் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு படங்களில் பிசியான சமந்தா சமீபத்தில் மயோசிட்டி சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களாக மிகவும் சிரமப்பட்டு வருவதாக உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டார்.

Advertisement

இந்நிலையில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த போது மாமனார் வீட்டில் இருந்து சமந்தாவிற்கு 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதே சமயம் அந்த தொகையை சமந்தா வாங்கவில்லை எனவும் கூறப்பட்ட நிலையில் கரன் ஜோகர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா இது குறித்து காமெடியாக ஒரு ரூமர் பரவியதாக கூறியுள்ளார். நான் ஜீவனாம்சம் 250 கோடி வாங்கி இருக்கிறேன். தினமும் என் கதவை திறந்து காத்திருக்கிறேன், வருமான துறையினர் வருவார்களோ என்று எதார்த்தமாக அவர் கூறியுள்ளார். அவர் இவ்வாறு பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in