TRENDING
30 நாள்கள் கரோனாவார்டில் டியூட்டி முடித்துவிட்டு தன் வீட்டுக்குப்போன மருத்துவர்… அப்போது நடந்த சம்பவம் தெரியுமா?

கரோனா வார்டில் மருத்துவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து வேலைசெய்கின்றனர். கரோனாவுக்கான மருந்தோ, தடுப்பூசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத சூழலில் கரோனா ஒழிப்பில் மருத்துவர்கள் ரிஸ்க் எடுத்து பணிசெய்து மக்களை காக்க முன்வரிசையில் நிற்கின்றனர். இப்படியான சூழலில் கரோனா வார்டில் டியூட்டிக்குப்போய் திரும்பிய ஒரு மருத்துவர் வீடு திரும்பிய போது நடந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கரோனா வார்டில் டியூட்டி முடிந்து தனது வீட்டுக்குத் திரும்பினார்.
அப்போது அவர் பிளாட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து அவருக்கு உற்சாகமாக வாசலில் இருந்து கைதட்டி வரவேற்கின்றனர். இதைத் துளியும் எதிர்பார்க்காத அந்த மருத்துவர் கண்ணீர் விடுகிறார். குறித்த அந்தக்காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.