CINEMA
நடிகர் விஜய் நடிக்காமல் நிராகரித்த…. அந்த 5 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்…. எதெல்லாம் தெரியுமா…??

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்தது தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் விஜய் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதேநேரம் அவர் நிராகரித்த ஐந்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.
அதாவது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்து ஹிட்டான தீனா, சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து ஹிட்டான முதல்வன், தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த ஹிட்டான தூள், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து ஹிட்டான சிங்கம், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ஹிட் கொடுத்த சண்டக்கோழி படங்கள் ஆகும்.