LATEST NEWS
7ஜி ரெயின்போ காலனி 2… மலையாள நடிகையை ஹீரோயினியாக தட்டி தூக்கிய செல்வராகவன்… அவங்க யார் தெரியுமா..??

தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் இரண்டு படங்களான துள்ளுவதோ இளமை மற்றும் அவரது சகோதரர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் ஆகிய திரைப்படங்களால் புகழ் பெற்றவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் அடுத்ததாக இயக்கிய செவன் ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினத்தின் மகன் ரவி கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதில் நடிகை சோனியா அகர்வால் ஹீரோயினியாக நடித்த நிலையில் இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு ரவி கிருஷ்ணா மீண்டும் ஹீரோவாகவும் செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜாவும் தங்களின் மேஜிக்கை மீண்டும் உருவாக தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜனை ஹீரோயினியாக செல்வராகவன் இறுதி செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
முதல் முதலில் மஞ்சுவாரியார் நடித்த உதாரணம் சுஜாதா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் அனஸ்வரா. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது 7 ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தில் இவர் ஹீரோயினியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.