“இந்த பழக்கத்தால என் வாழ்க்கையை இழந்தேன்”… நீங்க அப்படி பண்ணாதீங்க… ரசிகர்களுக்கு ரஜினி கூறிய அட்வைஸ்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்த பழக்கத்தால என் வாழ்க்கையை இழந்தேன்”… நீங்க அப்படி பண்ணாதீங்க… ரசிகர்களுக்கு ரஜினி கூறிய அட்வைஸ்…!!

Published

on

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா உள்ளிட்டா பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார்.

Advertisement

மேலும், மது அருந்துவதால் மூளை வேலை செய்யாது, சரியான முடிவு எடுக்க முடியாது, அதனால் குடும்பம் பாதிக்கும், குடிப்பழக்கத்தை கைவிட்டு விடுங்கள், குடிப்பழக்கத்தால் எவ்வளவு இழந்தேன் என அனைவருக்கும் அறிவுரை கூறினார். இதற்கு முன்பாக பலமுறை பல இடங்களில் குடிப்பழக்கம் மற்றும் சிகரெட் பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும் என ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in