‘சித்தா’ படம் பார்க்க Girl friend உடன் தியேட்டருக்கு வந்த நடிகர் சித்தார்த்…! வெளியான புகைப்படம்…! – cinefeeds
Connect with us

TRENDING

‘சித்தா’ படம் பார்க்க Girl friend உடன் தியேட்டருக்கு வந்த நடிகர் சித்தார்த்…! வெளியான புகைப்படம்…!

Published

on

தமிழ் சினிமாவின் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தற்பொழுது ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. இவர்  நடிப்பில் தற்பொழுது சித்தா படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது.

படத்தை ப்ரோமோஷன் செய்ய சித்தார்த் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் கூட அவர் நடித்து ப்ரொமோஷன் செய்திருக்கிறார். சித்தா பட ப்ரோமோஷனில் பெங்களூரில் நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் சென்னையில் பிரபலமான EGA தியேட்டருக்கு நேற்று வந்திருக்கிறார் சித்தார்த். நடிகர் சித்தார்த் உடன் நடிகை அதிதி ராவும் வந்திருந்தார். நடிகர் சித்தார்த் நடிகை அதிதியை காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

 

இவர்கள் இருவரும் தெலுங்கில் வெளியான ‘மகா சமுத்திரம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி இருவருமே இயக்குனர் மணிரத்தினம் அவர்களால் திரையுலகில் அறிமுகமானார்கள். தற்பொழுது இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தியேட்டருக்குள் வந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்…

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in